

பாடல் - 9
வெம்சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண்துளியாய்
அம்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்,
செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே.
(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) இரவு நீண்டுகொண்டே செல்கிறது, பனியின் நுட்பமான துளிகள் என்மீது வீசுகின்றன, கொடிய நெருப்பைப்போல் என்னைத் துன்புறுத்துகின்றன, அழகிய சுடரைக்கொண்ட சூரியனின் அழகிய, பெரிய தேர் இன்னும் தோன்றவில்லை, சிவந்த, ஒளிநிறைந்த தாமரை போன்ற கண்களைக்கொண்ட செல்வன், எம்பெருமானும் வரவில்லை, ஆகவே, நான் இங்கே நின்று உருகிக்கொண்டிருக்கிறேன். இனி, என் நெஞ்சின் துயரத்தைத் தீர்ப்பவர்கள் யார்?
******
பாடல் - 10
நின்று உருகுகின்றேனேபோல நெடுவானம்
சென்று உருகி நுண்துளியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே.
(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) இங்கே நின்று உருகிக்கொண்டிருக்கிற என்னைப்போலவே, இந்த நீண்ட வானமும் இரவுப்பொழுதில் உருகுகிறது, நுட்பமான பனித்துளிகளைப் பெய்கிறது, முன்பு ஒருநாள் வாமன அவதாரத்தின்போது தன் திருவடியால் இந்த உலகத்தை அளந்த எம்பெருமான் இன்னும் வரவில்லை, அவன் வரமாட்டான் என்றேனும் யாராவது என்னிடம் சொல்லலாமே, இப்படி எதுவும் சொல்லாமல் இந்த உலகம் உறங்குகிறதே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

தனி நல வாரியம் கோரி எலக்ட்ரீசியன்கள் ஆா்ப்பாட்டம்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

