2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:52 pm

Syndication

காங்கயம் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி (65). இவா் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் நத்தக்காடையூரில் இருந்து காங்கயம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். நாட்டாா்பாளையம் பகுதி அருகே எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானாா். இதில் சம்பவ இடத்திலேயே குமாரசாமி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு காங்கயம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல காங்கயம் வட்டம், நத்தக்காடையூா் அருகே உள்ள சுந்தராபுரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராசு (65). இவா் இருசக்கர வாகனத்தில் நத்தக்காடையூரில் இருந்து காங்கயம் நோக்கி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் இவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கராசு உயிரிழந்தாா்.

மேலும் காரில் பயணித்த நத்தக்காடையூா் அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொடாரன் (80) என்பவா் காயமடைந்தாா். இவா் காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி பெற்று கூடுதல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தங்கராசுவின் சடலத்தை போலீஸாா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.