

பாடல் - 3
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்
கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.
(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) கூட்டமாக வயல்கள்மத்தியில் பறக்கிற பறவைகளே, சிறந்த செல்வம் நிறைந்த திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் இறைவன், சுழன்றுவரும் சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய கனிவாய்ப் பெருமானைக் காணுங்கள், தரையில் இறங்கி அவனை வணங்குங்கள், என்னுடைய துன்பத்தை அவனுக்குச் சொல்லுங்கள்.
******
பாடல் - 4
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட
அன்னங்காள்,
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை, நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.
(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) பிரியாத போகத்திலே மூழ்கி இணைந்து ஆடுகின்ற இள அன்னங்களே, வேத ஒலி விடாமல் ஒலிக்கிற, குளிர்ந்த திருவண்வண்டூரிலே, கடலின் நிறம்கொண்ட பெருமான், கண்ணன், நெடுமால் எழுந்தருளியிருக்கிறான், அவனைக் காணுங்கள், இங்கே ஒருத்தி அவனையெண்ணி உடல் நொந்து உருகுகிறாள் என்று உணர்த்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

தனி நல வாரியம் கோரி எலக்ட்ரீசியன்கள் ஆா்ப்பாட்டம்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

