

பாடல் - 9
அடியை மூன்றை இரந்தவாறும், அங்கே நின்று
ஆழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈர்அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்குந்தோறும் என் நெஞ்சம்
நின்தனக்கே கரைந்து உருகும்,
கொடிய வல்வினையேன் உனை என்றுகொல் கூடுவதே.
எம்பெருமானே, நீ மாவலியிடம் மூன்றடி நிலத்தைப் பெற்ற தன்மையையும், அங்கே நின்று ஆழமான கடல், மண், விண் என அத்தனையையும் இரண்டே அடியால் அளந்துவிட்ட திறமையையும் சொல்லக்கேட்கும்போதெல்லாம், என் நெஞ்சம் உன்னை எண்ணிக் கரைந்து உருகும், கொடிய வல்வினைகளைச் செய்த நான் உன்னை என்று சேர்வேன்?
***
பாடல் - 10
கூடி நீரைக் கடைந்தவாறும், அமுதம் தேவர் உண்ண
அசுரரை
வீடும் வண்ணங்களே செய்துபோன வித்தகமும்
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற
நின்தனை
நாடும்வண்ணம் சொல்லாய் நச்சு நாக அணையானே.
எம்பெருமானே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து வந்த அமுதத்தைத் தேவர்கள் உண்ணச்செய்தாய், அசுரர்கள் வீழும்படி செய்தாய், உன்னுடைய இந்த வியப்பான செய்கை எனக்குள் புகுந்து என்னுடைய ஆவியை உருக்கி உண்கிறது, நஞ்சுள்ள நாகத்தைப் படுக்கையாகக் கொண்டவனே, நான் உன்னை நாடுவது எப்படி? சொல்வாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

தனி நல வாரியம் கோரி எலக்ட்ரீசியன்கள் ஆா்ப்பாட்டம்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

