

பாடல் - 1
மான் ஏய் நோக்குநல்லீர், வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண்கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?
மான்போன்ற பார்வைகொண்ட பெண்களே, கொடிய வினைகளைச் செய்துவிட்ட நான் ஒவ்வொரு நாளும் மெலிந்துகொண்டிருக்கிறேன், வானத்தைத் தொடுகிற அழகிய பாக்குமரங்களும், தேன் பொருந்திய மல்லிகைகளும் கமழ்கிற தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனாகிய எம்பெருமானின் திருவடிகளை நான் எப்போது சேர்வேன்?
******
பாடல் - 2
என்றுகொல் தோழிமீர்காள், எம்மை நீர் நலிந்து என்
செய்தீரோ,
பொன் திகழ் புன்னை, மகிழ், புது மாதவிமீது அணவித்
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்றபிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.
தோழிகளே, என்னை வருந்தச்செய்வதால் உங்களுக்கு என்ன பயன்? பொன்போன்ற மகரந்தங்களைக்கொண்ட புன்னை மரத்தின்மீதும், மகிழமரங்களின்மீதும், புதிய மாதவிக்கொடியின்மீதும் தென்றல் வீசுகிறது, அந்தத் தென்றலில் நறுமணம் கமழ்கிறது, அத்தகைய திருவல்லவாழ் நகரிலே நிற்கும் எம்பெருமானின் திருவடித் துகள்களை நான் என் தலையில் சூடிக்கொள்வது எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

தனி நல வாரியம் கோரி எலக்ட்ரீசியன்கள் ஆா்ப்பாட்டம்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

