

பாடல் - 7
மெய் அமர் பல்கலன் நன்கு அணிந்தானுக்கு,
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு,
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.
திருமேனியிலே பல அணிகலன்களை நன்கு அணிந்தவன், படமெடுக்கும் பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டவன், கையும் காலும் சிவந்த கண்ணபிரான், அத்தகைய பெருமானை எண்ணி, என் மகள் தன்னுடைய அழகை இழந்துவிட்டாள்.
***
பாடல் - 8
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்பட பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.
குருந்தமரமாக வந்த அசுரன் சாயும்படி அதனை முறித்த தனிவீரன், மாயமாக வந்த சக்கரத்தை உதைத்த மணாளன், பேயான பூதனை பிணமாகும்படி அவளிடம் பாலுண்ட பிரான், அத்தகைய பெருமானை எண்ணி, மணம்பொருந்திய கூந்தலையுடைய என் மகள் தன்னுடைய சிறப்பை இழந்துவிட்டாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

