

பாடல் - 3
மடநெஞ்சால் குறைஇல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி
விடநஞ்சு முலை சுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறை இலமே.
பூதனை என்கிற ஒரு பேய்ச்சி, மடநெஞ்சம் குறையாத தாய் வடிவம் கொண்டு வந்தாள், விஷம் தோய்த்த அவளுடைய மார்பகங்களைச் சுவைத்து அவளை வீழ்த்திய ஞானம் மிகுந்த சிறு குழந்தை, படமெடுக்கும் நாகத்தைப் படுக்கையாகக் கொண்டு, கிடந்த திருக்கோலத்தில் அருள் செய்கிறவன், பெரிய மலைகளைப் போன்ற திருத்தோள்களைக் கொண்டவன், உயர்ந்தவன், நெடுமாயன், எம்பெருமான், அத்தகைய பெருமான், என்னுடைய அடக்கம் என்கிற குணத்தைக் கவர்ந்துகொள்ளவில்லை, ஆகவே, இந்த அடக்கத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.
******
பாடல் - 4
நிறையினால் குறைஇல்லா நெடும் பணைத்தோள்
மடப்பின்னை
பொறையினால் முலை அணைவான், பொரு விடை
ஏழ் அடர்த்து,
உகந்த கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின்
கழிகோல் கைச்
சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறை இலமே.
பெண்மைக்குணம் நிறைந்தவள், நீண்ட, மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவள், மடப்பக்குணம் நிறைந்த நப்பின்னை, அவளுடைய மார்பகங்களை அணைப்பதற்காக, போர் செய்யும் ஏழு எருதுகளுடன் பொறுமையாகப் போரிட்டு வென்றான் எம்பெருமான், பின்னர் மகிழ்வோடு அவளை அணைத்தான், அப்பெருமான் ஆயனாகப் பிறந்து மாடுகளை மேய்க்கச் சென்றபோது, சாயம் பூசப்பட்ட, கறை படிந்த ஆடையை அணிந்திருந்தான், கையில் ‘கடையா’ என்கிற மூங்கில் கோலும், வீசுகின்ற கோலும் வைத்திருந்தான், சறைகைமணி என்ற மணியை அணிந்திருந்தான், அத்தகைய பெருமான், என்னுடைய தளிர் நிறத்தைக் கவர்ந்துகொள்ளவில்லை, ஆகவே, இந்தத் தளிர் நிறத்தால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

