நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்

பாடல் - 7

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவி உள்ளே
நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்றும் இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்,
நறும்துழாயின் கண்ணி அம்மா, நான் உனைக் கண்டுகொண்டே.

நறுமணம் வீசும் துளசி மாலையை அணிந்த பெருமானே, நான் உன்னைக் கண்டுகொண்டேன், உன்னை அறிந்து, அறிந்து, தெளிவு பெற்றுத் தெளிவு பெற்று, நிறைந்த ஞானமூர்த்தியான உன்னை என்னுடைய உயிரினுள்ளே வைத்தேன், என் குற்றங்கள் நீங்கபெற்றேன், அதனால், திரும்பத் திரும்பப் பிறந்து, இறந்து, நின்று, தடுமாறுகிற பேதைமை ஒழிந்தது.

******

பாடல் - 8

கண்டுகொண்டு, என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
எண்திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்து உகந்து
தொண்டரோங்கள் பாடி ஆடிட, சூழ்கடல் ஞாலத்துள்ளே
வண்துழாயின் கண்ணி வேந்தே, வந்திடகில்லாயே.

அழகிய துளசி மாலையை அணிந்த பெருமானே, உன்னை நான் கண்டுகொள்ள வேண்டும், எட்டுத் திசைகளிலிருந்தும் வந்த மலர்களை உன்னுடைய திருவடிகளிலே தூவி, ஆவல் தீர என் கைகள் வழிபட வேண்டும், உன்னைப் போற்ற வேண்டும், மனம் மகிழ வேண்டும், தொண்டர்களாகிய நாங்கள் பாடி ஆட வேண்டும், எம்பெருமானே, இப்படி நாங்கள் உன்னை வழிபடுவதற்காக, கடலால் சூழப்பட்ட இந்த உலகில் நீ எழுந்தருள்வாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.