டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

அம்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அம்சிறைய சேவலுமாய் ஆ!ஆ! என்று எனக்கு அருளி
வெம்சிறைப்புள் உயர்த்தாற்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புஉண்டால் என்செயுமோ.

அழகிய சிறகுகளைக்கொண்ட நாரையே, மடப்பம் என்ற குணத்தையுடைய நாரையே, அருள் உள்ளம் கொண்ட நாரையே,

நீயும், உன்னுடைய இணையாகிய அழகிய சிறகுகளைக்கொண்ட ஆண் நாரையும் என்னைப் பாருங்கள், 'அடடா!' என்று என்மீது பரிதாபப்படுங்கள், எனக்காக எம்பெருமானிடம் தூது செல்லுங்கள்.

எம்பெருமான், எதிரிகளுக்குக் கொடுமை செய்கிற சிறகுகளைக்கொண்ட கருடனைக் கொடியாக உயர்த்தியவன், அவனிடம் சென்று எனக்காக நீங்கள் பேசுங்கள்,

அப்படிப் பேசும்போது, அவன் உங்கள் சொல்லைக் கேட்காமல் இருந்துவிடக்கூடும். 'கேளாமை' என்கிற வலிய சிறையில் உங்களை இடக்கூடும், அதனால் உங்களுக்கு என்ன துயரம் வந்துவிடும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.