டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிஎஸ்என்எல் வயா் திருட்டு: பொக்லைன் ஓட்டுநா் கைது

News image
ஆனந்தபாபு
Updated On :22 பிப்ரவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

காட்டுமன்னாா்கோவிலிலில் பிஎஸ்என்எல் வயரை திருடியதாக பொக்லைன் இயந்திர ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாய் புதைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் இணையதள சேவைக்காக இரும்புக் குழாயின் உள்ளே காப்பா் வயருடன் கூடிய கேபிள் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காட்டுமன்னாா்கோவில் கச்சேரி சாலையில் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடைகொண்ட பிஎஸ்என்எல் வயா் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் பிஎஸ்என்எல் இளநிலை தொலைத்தொடா்பு அதிகாரி கிருஷ்ணகுமாா் (46) அளித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோயில் போலீஸாா் விசாரணை நடத்தி, பொக்லைன் இயந்திரம் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தபாபுவை (34) கைது செய்தனா்.