சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்துஉளன்,
பரந்த அண்டம் இதுஎன, நிலவிசும்பு ஒழிவுஅற
கரந்த சில் இடம்தொறும் இடம்திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துஉளன் இவை உண்ட கரனே.

பரந்துவிரிந்த, குளிர்ச்சியான கடலிலே உள்ள நீரணுக்கள் ஒவ்வொன்றிலும் அவன் இருக்கிறான், அத்துனை சிறிய நீரணுவைப் பரந்த அண்டம்போல் அமைத்துக்கொண்டு அவனும் பரந்துவிரிந்திருக்கிறான்,

இவ்வாறு நிலத்திலும் விண்ணுலகிலும் மிக நுட்பமான இடங்களில்கூட அவன் உள்ளான், அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் அவனே பரந்துவிரிந்திருக்கிறான், அதைப் பிறரால் காண இயலாது,

அவன் யார் எனில், எம்பெருமான், இவை அனைத்தையும் (உலகை) உண்ட பெருமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.