சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

உளன்எனில் உளன், அவன் உருவம் இவ் உருவுகள்,
உளன்அலன்எனில் அவன் அருவம் இவ் அருவுகள்,
உளன்என இலன்என இவைகுணம் உடைமையில்
உளன், இரு தகைமையொடு ஒழிவுஇலன் பரந்தே.

சிலர், இறைவன் இருக்கிறான் என்கிறார்கள், அப்போது அவன் நிஜமாகவே இருக்கிறான், இவ்வுலகில் உருவத்தோடு இருக்கும் அனைத்துப்பொருள்களும் அவனே ஆவான்,

வேறு சிலர், இறைவன் இல்லை என்கிறார்கள், அப்போதும் அவன் இருக்கிறான், உருவம் இல்லாத பொருள்கள் எல்லாவற்றிலும் அவனே நுட்பமாகத் திகழ்கிறான்,

இவ்வாறு, உள்ளவன், இல்லாதவன் என்கிற இரு குணங்களும் எம்பெருமானுக்கு உண்டு, இந்த இரு தன்மைகளோடு உருவம், அருவம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளான் அவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.