நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 8
சிவனாக முப்புரங்களை எரித்தவன்


சுரர்அறிவு அருநிலை, விண்முதல் முழுவதும்
வரன்முதலாய், அவைமுழுதுஉண்ட பரபரன்,
புரம் ஒருமூன்று எரித்து, அமரர்க்கும் அறிவு இயந்து
அரன்,அயன் என உலகு அழித்து,அமைத்துஉளனே.
தேவர்களாலும் அறிய இயலாத நிலையில் இருப்பவன் எம்பெருமான், விண்ணில் தொடங்கி அனைத்துக்கும் காரணமானவன், பிறகு, அவை அனைத்தையும் முழுமையாக உண்ட பெருந்தெய்வம்,
சிவனாக முப்புரங்களை எரித்தவன் அவனே, பிரம்மனாக தேவர்களுக்கெல்லாம் அறிவைக் கொடுத்தவன் அவனே, இந்த உலகை அழித்து, அமைத்து, அதிலுள்ள உயிர்களுக்குள் தங்கியிருப்பவனும் அவனே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...