டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்
நீயோனிகளைப் படை என்று நிறைநான்முகனைப் படைத்தவன்,
சேயோன் எல்லா அறிவுக்கும், திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன், எல்லா எவ்உயிர்க்கும் தாயோன் தான்ஓர் உருவனே.

சிறந்த பிறப்புகளை உடையவர்கள், தங்களுடைய தொழிலை நன்கு அறிந்தவர்கள் வானோர்கள், அந்த வானோரையும் முனிவர்களையும் மற்ற உயிர்களையும் படைத்தவன் நான்முகப் பிரம்மன்,

ஆற்றல் நிறைந்த அந்தப் பிரம்மனைப் படைத்தவன் எம்பெருமான், பின்னர், 'எல்லா உயிர்களையும் நீ படைப்பாயாக' என்று அவனுக்குக் கட்டளையிட்டான்,

எம்பெருமான் யாருடைய அறிவுக்கும் அகப்படாதவன், திசைகளையெல்லாம் தன் திருவடியால் தாவி அளந்தவன், எல்லா உயிர்களுக்கும் தாயானவன்,

அப்படிப்பட்ட பெருமான், நற்குணங்களின் உருவமாயிருக்கிறானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.