என்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு


என்றும் என் இதயத்தில் அன்பை பொழிகிறது
அன்னையின் அன்பு மொழி!
என்றும் என் இதயத்தில் இடம்பிடிக்கிறது
தந்தையின் நட்பு மொழி!
என்றும் என் இதயத்தில் இதமளிக்கிறது
என்னவளின் சைகை மொழி!
என்றும் என் இதயத்தில் முள்ளாய் குத்துகிறது
துரோகத்தின் மவுன வலி!
என்றும் என் இதயத்தில் புதைந்து கிடக்கிறது
அடங்கிப்போன ஆசைகளின் மவுனமொழி!
என்றும் என் இதயத்தில் ரணமாய் ஆறாதிருக்கிறது
நாவினால் பிறிதொருவன் சுட்ட வலி!
என்றும் என் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறது
குழந்தைகளின் குறும்பு மொழி!
என்றும் என் இதயத்தில் ஒளிந்திருக்கிறது
தேசத்தின் பக்தி வழி!
என்றும் என் இதயத்தில் வழிந்தோடுகிறது
இரக்கமென்னும் ஈர ஆறு!
என்றும் என் இதயத்தில் நினைவாக பூத்திருக்கிறது
பால்யத்தின் பருவ மொழி!
என்றும் என் இதயத்தில் லயித்திருக்கிறது
என் தாய் தமிழ் மொழி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...