யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்


நிலத்தடி நீர் கீழே கீழே
ஓடிப் போவது...
யார் இட்ட சாபம்?
பருவத்தே பொழிய மறந்த
மழை நிலத்தைத் தொட
பயந்தது........
யார் இட்ட சாபம்?
வரம் கொடுத்த சிவனின்
சிரத்திலேயே வரன் பலிக்கிறதா
என முயற்சித்த
அசுரன் கோபத்தில்
இட்ட சாபத்தானோ?
வரம் கொடுக்க
யோசிக்காத கடவுள்
கொடுத்த வரத்தினால்
பட்ட அனுபவத்தினால்
இட்ட சாபம்தானோ
இன்றைய நம் இன்னல்கள்?
நாம் உருவாக்கிய பணம்
என்ற காகிதம்
ஈன்ற தாயினையும் கொலை
செய்ய தூண்டியது
யார் இட்ட சாபம்?
மனிதனே...... யோசியுங்கள்
சாபங்களின் தாக்கம் இன்றி வாழ
பாபங்கள் செய்வதை தவிர்ப்போம்!
நேர்மையுடன் வாழ்வோம்!!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...