2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை: ரெத்தின. ஆத்மநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

கருவில் வளரும் குழந்தையது
கலைந்தால் அதனின் தாக்கத்தை
உரியவள் மிகவும் உணர்ந்திடுவாள்
உற்றார் உறவினர் புலம்பிடுவர்!

சுமந்தவள் மிகவும் மகிழ்ந்திடவே
சுற்றங்கள் அனைத்தும் இணைந்திடவே
வயிற்றில்   வளரும்   குழந்தையது
வந்திட   வேண்டும்   உலகினுக்கே!

சுமப்பதை    நமது    பெண்களுமே
சுகமாய்த்  தானே   எண்ணிடுவர்!
எத்தனை குழந்தை பிறந்தாலும்
எப்படியோ அதனை வளர்த்திடுவர்!

கருவில் தொலைந்த குழந்தையாக
காவிரி     இன்று    கிடக்கிறது!
அரசியல்  அதனின்  உட்புகுந்து
ஆட்சி   செய்து  பார்க்கிறது!

கருவின்  முட்டைக்  கருவினையே
கறண்டி எடுத்து அழிப்பதுபோல்
காவிரி   மணலைக்  காசாக்கி
களிக்குது   இங்கு   ஒருகூட்டம்!

ஒவ்வொரு மனிதனும் உரிமையுடன்
ஒன்று  சேர்ந்து   கைகோர்த்து
அழித்திட வேண்டும் கயவர்களை
ஆக்கம்   கெட்ட    கூவைகளை!

அடுத்து வரப்போகும் தலைமுறைக்கு
அதுவே நாம் செய்யும் பேருதவி!
கருவில் தொலைந்த குழந்தையைப்போல்
கருகிட வைப்போம் கயவர்களை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.