2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை: பெருவை பார்த்தசாரதி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

ஆண்டுகள் பலகடந்து குழந்தைவரம் வேண்டி     ஆவலாய்க் காத்திருக்கும் தம்பதிகள் பலராவர்.!ஆண்டாண்டு காலமாய் ஆலயங்களின் முன்     அரிதான தவம்பூண்டு அரசமரத்தைச் சுற்றுவர்.!சீண்டி விளையாட பிள்ளையிலை எனும்பெரு     குறைகொண்ட மாந்தர்கள் வாழுமிவ் வுலகில்..வேண்டாமினிப் பெண்குழவி யென்றே..பிறவி     வருமுன் கருவையழிப்பார் தாய்மை அறியார்.! கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? வென்பதை     கண்டுகொள்வது சட்டப்படி குற்றமாம்..வளர்ந்தகருவைக் கலைப்பதுவும் குற்ற மென்பதைக்     கருத்தில் இருத்திக் கொளாத் தாய்மாருமுண்டு.!கருவிலே தொலைந்த பெண் சிசுக்களைக்      கணக்கிட்டால் கலியுகத்தின் தீமை அறியலாம்.!கருவில் தப்பிவிட்டாலோ?பின்கள்ளிப் பாலும்     கதிர்நெல்லும் கொலைக் குதவும் ஆயுதமாகும்.!உருவில் பெண்ணாயினும் உளமதில் உரமுடன்      உருமும் புலியை விரட்டியவள் தமிழ்ப்பெண்.!பெரும்பகுதி வாழ்வை வெள்ளையருக் கெதிராக      போராடிக் கழித்தவீர மங்கை வேலுநாச்சியார்.!குருவாக அண்ணலையேற்று அவரின் விடுதலைக்      கொள்கைக்குத் தியாகம் செய்த அம்புஜம்மாள்.!கருவில் தொலைந்த பெண் குழந்தையாகின்      காலமிவர்களை இன்றளவும் நினைவு கூறுமா..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.