2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருவில் தொலைந்த குழந்தை: பெருமழை விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தையாய்
இந்தியச் சுதந்திரம் இங்கு 
காற்றில் பறக்கிறது!

அடியாட்களும் அதர்மவாதிகளும்
அரசியலில் நுழைந்ததால்
அது சாக்கடையாய் நாறுகிறது!

காசுக்காக ஓட்டு போடும்
கயமைத் தனம் நாட்டில்
கச்சிதமாய் வேரூன்றி விட்டது!

தலைவர்கள் அத்தனை பேரும்
தங்கள் கட்சி ஆட்சியமைக்க
தப்பான வழியில் நடக்கிறார்கள்!

எதனைப் பற்றியும் கவலையின்றி
எப்பொழுதோ கிடைக்கும் இலவசத்திற்காய்
மக்களனைவரும் நீண்ட வரிசையில்!

திருமதிகள் கூட நம்மூரில்
செல்வி  என்று கூறியே
ஆட்சி செய்து அகன்றார்கள்!

உலகில் உள்ள மக்களில்
ஒன்றுக்கும் உதவாத மக்களாய்
இன்றைய தமிழ் மக்கள்!

அரசு அலுவலகங்கள் பலவற்றிலும்
அன்றாடம் புரளுது பலலட்சம்
அன்பளிப்பு என்ற பெயரால்!

உரிமைக்குப் போராடும் அரசூழியர்கள்
உரிய வேலையைச் செய்யாமல்
ஊரை ஏமாற்றவே செய்கின்றனர்!

கக்கூஸ் தண்ணியில் டீ போட்டு
கவனிக்கிறது நம் ரயில்வே
கனிவோடு அதன் பிரயாணிகளை!

மருத்துவர்கள் நம் நாட்டில்
மங்கையரைப் படம் பிடித்து
மாற்றுத் தொழில் செய்கின்றனர்!

சிறுமியாயப் பிறந்த காரணத்தால்
சின்னா பின்னப் பட்டு 
கொலைக்கு ஆளாகிறார்கள் கொழுந்துகள்!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை
ஆள்பவர்களே அலட்சியம் செய்தால்
அந்தநாடு உருப்படுவ தெப்படி?

கருவில் தொலைந்த குழந்தையாய்
இந்தியச் சுதந்திரம் இங்கு 
காற்றில் பறக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.