கருவில் தொலைந்த குழந்தை: ப. வீரக்குமார்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

என் தாய்
அமுதூட்டி
கூந்தல் சிக்கல் நீக்கி
பள்ளிசெல்ல
முகாரிபாடும்
எனை
முகம் மாற்றி
பொட்டிட்டு
நெற்றிமுறித்து
விடைதந்தவளை
வினாவுடன் பார்த்து
ஈருளியில்
பின் உட்கார்ந்து
தாயிற்கு
தாலாட்டுக்காட்டி
தந்தை ஈருளியை
உயிர் பித்தலில்
இடைபிடித்து
குலுங்களோடு
பள்ளிசென்றேன்
பாடம் முடித்ததும் தூங்கிவிட்டேன்
விழித்துப்பார்க்க
சகதோழிகளுடன்
கனவுகளைமாற்றி
நினைவோடு
அனாதை இல்லத்தில்
தாய் தந்தைமுகம் அறியா
நான் . . .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...