தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மிச்சத்தை மீட்போம்: -ஆ. செந்தில் குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

சுந்தரத் தாய்மொழியில் கற்பதற்கு மனமுண்டா…?சுரண்டிப்பிழைக்காது அரசியல் செய்வோர் எவருமுண்டா…?சுகம்பார்க்க காசுவாங்கா மருத்துவமனை ஏதுமுண்டா…?சுயவிளம்பரம் தேடாத மனிதரென்று யாருமுண்டா…?சுங்கவரிச் சாவடிகள் இல்லாத சாலையுண்டா…?சுற்றுப்புறத் தூய்மை சற்றேனும் இங்குண்டா…?சுற்றத்தைப் பேணுகின்ற மனப்பான்மை சிறிதுமுண்டா…?சுதந்திரம் கிடைத்தபின்னும் பேச்சுரிமை என்பதுண்டா…?வன்முறைகள் இல்லாத நாடென்பது ஒன்றுண்டா…?வகைப்பாடு இல்லாத மனிதகுலம் இங்குண்டா…?வசதியில்லா மாணவர்க்கு கல்விகற்கும் வாய்ப்புண்டா…?விளைநிலங்கள் மனையாகா நிலையேதும் வருவதுண்டா…?முதியோர் இல்லங்கள் முளைக்காத நிலையுண்டா…?மதுவிற்கு அடிமையாகா தலைமுறையும் இங்குண்டா…?மண்வளங்கள் காப்பதற்குத் திட்டங்கள் ஏதுமுண்டா…?மனதிற்கு இதமான சூழ்நிலைகள் மெத்தவுண்டா…?நலத்திட்டம் எல்லாமே உரியவரை அடைவதுண்டா…?நெளிவுசுளிவு தெரியாதோர் வாழ்வதற்கு வாய்ப்புண்டா…? - நமைச்சூழ்ந்த நல்லனவெல்லாமே இவற்றுள் தப்பிப்பிழைத்த மிச்சங்கள்…நல்வாழ்வு வாழ்ந்திடவே இம்மிச்சங்களை மீடடெடுப்போம்…!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.