வெல்லும் சொல்: இராம இளங்கோவன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

வெல்லும் சொல்லை வாளாய் சுழற்றிக் கொல்லும் சொல்லைக் கொன்று போடுவோம்; இல்லை என்ற சொல்லை வாழ்வில் இல்லா தாக்க எழுச்சிக் கொள்வோம்! வலிமை யுள்ள வெல்லும் சொல்லால் வையத் தலையெ ழுத்தை மாற்றுவோம் ;வலிகள் நிறைந்த சொல்லை நீக்கிவாழ்வில் இன்ப வளத்தைப் கூட்டுவோம்! அல்லும் பகலும் அயரா துழைப்போர் அழுகையை மாற்ற வெல்லும் சொல்லால் நல்லன நாற்றாய் நட்டு வைப்போம்;பொல்லாச் சொல்லைப் போட்டு புதைப்போம்! நெல்லை விளைக்கும் வயலாய் நல்ல வெல்லும் சொல்லை விளைய வைப்போம்;கல்லும் கனிந்து கனிச்சுவை யாக,கானலும் பருகிட கண்டு பிடிப்போம்! தொல்லை யானத் துயரச் சொல்லை அல்லவை விளைக்கும் ஆகாச் சொல்லை எல்லாம் களைந்து எழுச்சி ஊட்டும் வெல்லும் சொல்லை வாழ்வில் ஏற்போம்! இல்லந் தோறும் உள்ளந் தோறும் இத்தரை தோறும் துறைகள் தோறும் வெல்லத் தமிழின் வெல்லும் சொல்லை மனிதம் விளைய விதைத்து வைப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...