சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் இன்று (பிப். 23) தெரிவித்துள்ளார்.
இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்து, பெயர் சேர்க்க விரும்புவோர் தற்போது கூட விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், அதில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆட்சியர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடியாக குறைந்தது. அதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு டிச. 19 முதல் பிப். 10 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டது. பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் படிவம் 6, மூலம் 27,53,796 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் உள்ளனர்.
Summary
Those whose names are not on the final voter list can apply TN CEO Archana Patnaik
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆருக்கு நன்றி!

உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



