நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

சிந்தனைகள் தொடர்ந்திருக்கும் செயலை எண்ணி   சிதைந்திடாது முடிப்பதற்கு வழிகள் தேடி’எந்தவொரு பாதையிலே சென்றால் நன்று   என்றுதினம் ஏங்குவதே மனதின் தொண்டுபந்தமென்றும் பாசமென்றும் உந்தும் ஆசை   பற்றுவைத்த காரணத்தால் நிறைந்தே சேரவந்துநின்ற பிறப்பினிலே வாட்டம் ஓட்டம்   “வாழ்க்கையெல்லாம் போர்க்களமே”யார்க்கும் இங்கே !நொந்துநூலாய் அந்துவிடும் அச்சம் கொள்ள   நிறைவாக்க வேண்டுமென்று இச்சை கொள்ளபந்துருளும் நிலைபோலே பாதை மாறி   படுந்துன்பம் படுவோர்க்கே தெரியும் என்றும்எந்தசெயல் செய்தாலும் இடையூ ராகி   இன்னலதே முந்திவந்து எதையும் மாற்றும்வந்திருந்த வசந்தமெல்லாம் புயலாய் மாறும்   “வாழ்க்கையெனும் போர்க்களமே” வரவென் றாகும்வருவதெல்லாம் இப்படித்தான் என்றே எண்ணி   வாய்த்ததுதான் வாழ்க்கையென்ற நிறைவே கொண்டுதருவதெல்லாம் தன்மகிழ்வாய் கருதும் போது   தனித்துவந்து சஞ்சலமே தோன்றா தென்றும்தெருவினிலே வாழ்ந்திருப்போர் துன்பம் கண்டு   தேர்ந்திருக்கு நமதுவாழ்க்கை நன்றே என்றுவருந்திடாது இருநிலையும் சமமாய் கொண்டால்   “வாழ்க்கையெல்லாம் போர்க்களமா” இல்லை ! இல்லை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.