வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் இரா. இரவி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் உண்டுவேதனை சோதனை துயரம் எல்லாம் உண்டு!இழப்பு பேரிழப்பு இன்னல் எல்லாம் உண்டுஇன்பமும் அவ்வப்போது வாழ்வில் வந்து போகும்!இன்பம் மட்டுமே நிரந்தரமானவர்கள் எவருமில்லைஇன்பத்துடன் துயரமும் கலந்தது தான் வாழ்க்கை!போர்க்களத்தில் வெற்றி தோல்வி இரண்டும் உண்டுபோராட்டம் போன்றது தான் மனித வாழ்க்கையும்!தோல்வி கண்டு துவண்டு விடுதல் கூடாதுதோல்விக்கும் பின் வெற்றியும் வருவது உண்டு!ஒருமுறை முயன்றுவிட்டு விரக்தியடைதல் தவறுமறுமுறை முயன்று வென்றுவிடலாம் நம்பு!கவலைப்படுவதால் கவலை நீங்கி விடாதுகவலையை மறந்து கடமையை நிறைவேற்று!மன்னர்களின் போரில் விதிமுறைகள் உண்டுமனித வாழ்க்கைப் போரில் விதிமுறைகள் இல்லை!எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் வாழ்வில்எதையும் எதிர்கொள்ளும் மனநிலை வேண்டும்!நினைத்தபடி அமைவதல்ல நம் வாழ்க்கைநினைக்காததும் வாழ்வில் திடீரென நடக்கும்!மாற்றம் ஒன்று தாம் மாறாதது என்பது உண்மைமாற்றம் வாழ்வில் வருவது உண்மை நம்பு!இரவு இரவாகவே இருட்டாகவே இருப்பதில்லைஇரவு மாறி பகல் வரும் ஒளி பெறும்!இன்னல் யாருக்கும் நிரந்தரமில்லை உணர்கஇன்னல் நீங்கி இன்பம் பிறக்கும் அறிக!போர்க்கள வீரனின் கவனத்துடன் வாழ்க்கையில்போராடி வெற்றி காண முயலுங்கள்!வாழ்க்கையெனும் போர்க்களம் பாடம் தரும்வளமான வாழ்வும் தரும் வீழ்ச்சியும் தரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...