நீர் வற்றியக் குளம்: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

குளத்தில்நீர் வற்றியதில் கவலையில்லை -- மழைபொழியும் ! குளங்கள்பல காணாமல் போனதனைக் காண்க !களங்களாகி மனைகளாகி அவைகளெல்லாம் -- அரசியல் கயவர்பலர் கவர்ந்திட்ட அவலமதை உணர்க!உளந்தனிலே தூய்மையிலார் தமைதேர்ந்திட்டே -- நாம் ஓலமிட்டு அழுகின்றோம் கொள்ளைதனைக் கண்டு !விளக்கமதை என்றுமக்கள் கண்டிடத்தகுமோ -- கொடிய வீணர்களை விரட்டிடும்நாள் என்னாள் தானோ ?எதனைத்தான் கவர்வதென்ற வரைமுறையின்றி -- காணும் எதனையுமே கவர்கின்றத் திறன்தனைக் கொண்டுமுதலில்லாத் தொழிலாக இதனைக்கொண்டார் -- ஏரி முதலாகக் குளங்கள்வரை தனதெனக் கண்டார் !சதகோடி காண்கின்றத் திறன்தனைக்கொண்டு -- பலரும் சாதனையைப் புரிந்திட்டார் தமிழகந் தன்னில் !இதனைநாம் இன்னுமிங்கே பொறுத்திடத்தகுமோ -- நம்மை இவ்வுலகோர் தூற்றிடவே காண்பதும் முறையோ ?நீர்வற்றியக் குளந்தனைப் போன்ற -- அவல நிலைதன்னில் தமிழக ஆட்சி !கூர்கெட்டோர் தமைநாம் தேர்ந்தே -- ஆளக் கோட்டைபுக விட்டதால் தானேசீரகெட்டுப் போனதின் நாடும் -- மக்கள் சிறிதேனும் மகிழ்வினைக் காணார் !போர்வந்து ஓய்ந்ததன் பின்னம் -- காணும் பொலிவிழந்த நிலைதனில் நாடும் !நீர்வற்றியக் குளங்களதே நிலம்மீது எங்கெங்கும்கார்மேகம் மழைபொழியாக் காரணத்தால் ! -- சீர்கொண்டுவிவசாயம் தழைப்பதெங்கே ? வேளாண்மை இல்லையாச்சு !தவறெல்லாம் காட்டையழிப்ப தால் !கவனமுடன் அரசாங்கம் கணக்கற்ற அணைகள்கட்டாத்தவறால்தான் காணும்நீர்த் தட்டுப்பாடு ! -- இவர்களெலாம்இலவசங்கள் தனைத்தந்தே ஏய்த்திட்டார் வாக்கைப்பெற ;பலனிதுவே என்றானதைப் பார் !நீர்வற்றிய நிலைகண்டு நிலைகுலைந்தோம் நாமெல்லாம்,கூர்கெட்டோர் ஆட்சியாலிக் கொடுமையெலாம் ! -- நீர்மேகம்கணக்காகப் பொழிந்திட்டக் கதையில்லை எந்தஆண்டும் ;இணக்கமுடன் சேர்க்கஅணைகள் இல்லை !குளங்களதும் ஏரிகளும் குன்றியதே அளவினிலே,விளக்கமிலா அரசியல் வீணர்களால் ! -- களங்களாக்கிவீடுகளைக் கட்டிக்கொள்ள விட்டதனால் நேர்ந்தகதி ;கேடுகெட்டோ ரால்வந்தக் கேடு !வற்றாதக் குளங்களிலே வகைவகையாய் நீர்மலர்களைப்பெற்றிருந்தோம் அக்காலம் பெரிதுமாய் ! -- குற்றப்பின்னணியைக் கொண்டோரை பெரிதுமாய்த் தேர்ந்தபலன்குன்றியதே நீர்வளமெனக் கூறு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...