தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது குறித்து அதன் நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலர்கள் மற்றும் வன்னியர் சங்க மாநில, மாவட்டத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று(பிப். 26) நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மாவட்டச் செயலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “திராவிட கட்சிகளோடுதான் கூட்டணி அமையும், யாருடன் கூட்டணி என்பதை பிப். 28ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.
கூட்டணி குறித்து தற்போது தெரிவிப்பதற்கான களம் சரியாக அமையவில்லை, இன்றையக் கூட்டத்தில் தேர்தல் உக்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்றார்.
பாமகவுக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என அதன் நிறுவனர் ராமதாஸ், கூட்டணி குறித்து சூசகமாக நேற்று அறிவித்திருந்த நிலையில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி கூட்டணி அமையும் என்று இன்று தெரிவித்துள்ளார்.
Summary
PMK founder Ramadoss has explained what he said at a consultative meeting held in Tailapuram under the chairmanship of its founder Ramadoss.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்; மருத்துவமனையில் அனுமதி!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



