சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

மோடி தமிழக வருகைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நயினார் நாகேந்திரன்

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகைக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நயினார் கூறியது....

News image
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்- கோப்புப்படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகைக்குப் பிறகு, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டுக்கான பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சரியான ஒருங்கிணைப்பு தேவை என வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்பாக திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை என குற்றம் சாட்டினார்.

மோடி தமிழக வருகைக்குப் பின்னரே தொகுதிப் பங்கீடு

"பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்த பிறகு, பாஜக - அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும். காங்கிரஸ் போன்று கூட்டணி ஆட்சி என்ற பிடிவாதம் கிடையாது.

தமிழகத்தில் மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளில் கஞ்சா, பீர் பாட்டில்களை சுமந்து செல்கிறார்கள்... நமக்குள் வேறுபாடுகள் இருக்கக்கூடாது, என்டிஏ கூட்டணியாக இணைந்து செயல்பட வேண்டும். நாம் அனைவரும் கடினமாக உழைத்து தமிழ்நாட்டிற்கான நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று நாகேந்திரன் கூறினார்.

பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை இரவு தங்குகிறாா். மறுநாளான மாா்ச் 1-ஆம் தேதி காலை புதுச்சேரிக்குச் சென்று அங்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பிறகு பாஜக ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமா் உரையாற்றுவாா்.

புதுச்சேரியில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, தூங்கா நகரம் என்றும், தமிழ்நாட்டின் மிகவும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் ஒன்றான மதுரைக்கு பிரதமா் செல்கிறாா். முருகனின் ஆறு படை வீடு ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பிரதமா் திட்டமிட்டுள்ளாா். தொடா்ந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க விழாவில் கலந்துகொண்டு, காணொலி மூலம் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா். பின்னா், தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறாா்.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பாஜக-அதிமுக கூட்டணிக்கு எதிராக வெற்றி பெற 'திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்பை முன்னிறுத்த முயற்சிக்கும்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி, தமிழகத் தேர்தலை மும்முனைப் போட்டியாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 பேரவைத் தேர்தலில், திமுக 133 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 18 இடங்களையும், பாமக ஐந்து இடங்களையும், விசிக நான்கு இடங்களையும், மற்றவர்கள் எட்டு இடங்களையும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கூட்டாக 159 இடங்களில் வெற்றி பெற்றது. என்டிஏ கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றாலும், அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.

summary

Tamil Nadu BJP chief Nainar Nagendran on Thursday announced that the seat sharing the talks within the National Democratic Alliance for the forthcoming state polls would begin following PM Narendra Modi's upcoming Madurai visit on March 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.