கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!
கூட்டணி ஆட்சி குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு...


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பாஜகவில் இருந்து சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக தேர்தல் பணிமனை திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், "இங்குள்ள அனைவரையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் பாஜகவில் இருந்து, 20 - 30 பேர் எம்எல்ஏக்களாக வருவார்கள். சிலர் அமைச்சர்களாகவும் வருவார்கள். அமைச்சராக வருவதற்கு வி.பி. துரைசாமி ஆசிர்வாதம் வாங்கிவிட்டார். இறைவன் அருள் இருந்தால் நிச்சயம் நடக்கும்" என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு சென்ற பிறகே தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் பிடிவாதம் காட்டவில்லை என்று பதிலைத்துள்ளார்.
அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...