நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: வேலூர்.வெ.ராம்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

மண் பாலையாக
மணல்மேடு திட்டுக்கள்...
தடயமேயின்றி மறைந்துவரும்
நீர்,குட்டை,மடைகள்..நீரின்றி
முட்களாக கிடக்கும் மீன்கள்...
எங்கே காணாமல் போனது,
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
நாரைகள்,கொக்குகள்?
காணாமல் போன தாகம்
தீர்க்க வரும் பறவைகளும்,
சிறு விலங்கினங்களும் எங்கே..
காய்ந்த சருகுகளாக மணலில்
படர்ந்து கிடக்கும் செடி-கொடிகள்...
பெண்களைக் காணாமல்
வாட்டத்தில் வாடும் படித்துறைகள்...
குழந்தைகளைக் காணாமல்
ஆழ்ந்த வருத்தத்தில்,
ஆற்றோர ஆலமர விழுதுகள்...
நெடுநாட்களாக தண்ணீரில்
குளிக்காத அரசமர பிள்ளையார்...
நீருக்கு பதிலாக ஆங்காங்கே
வளர்ந்து நிற்கும் கருவேல மரங்கள்...
இதற்கெல்லாம் சிகரம் வைப்பதாய்,
மோட்டார் கருவிகள் துணையுடன்
குளத்துக் கரையோரம்  ஊறிஞ்சு
விற்கப்படும் நிலத்தடி நீர்...
நீர் வற்றிய குளத்தையும்,மண்ணை
மலடாக்கி விற்பனை செய்யும்
முயற்சியில்,பேராசை மனிதன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.