நீர் வற்றிய குளம்: கோவை.நா.கி.பிரசாத்


"குடுவையில் எறிந்த
கல்லெடுத்து
குளத்தில் போட்டு
காத்திருக்கு காகம்!
நீர் இன்றி கரையவும்
முடியாமல் மெளனமாய்
பாவம் காகம்!
குதித்து கும்மாளமிட்ட
மீன்களுக்கு
இப்போது
யாரோ வெட்டிய குழியாய்
வெயில் நிரப்பி வெட்டியாய் விரிந்துகிடக்கு!
ஆம்...
கரையேறியும்
மரண வேதனையில்
மீன்கள்!
தெளிந்த நீர் பருகி
தெருவோடு எகிறி
குமரியின் விரல் கடித்து
குறும்பாக நீந்திய மீன்கள்!
அய்யகோ....
அடியோடு கருவாடாய்
அண்ணாந்து கிடக்கே!
சிறுவர்கள் விளையாட்டும் !
ஏரிக்கரை எசப்பாட்டும் !
எருமமாட்டு குளிபாட்டலும் !
இப்படி எல்லாம்...
இழந்து இப்ப வானம்பாத்த
சுடுகாட சுருண்டுகிடக்கே!
நீரின்றி
தண்ணி தெளிச்சு விட்டது
யாருங்க!?
இது வெறும் குளமில்லைங்க!
எங்க குலம் தளைக்க
தண்ணிய பாலா ஊட்டும்
பரம்பரை தாயிங்க!
தூர்வாறி
மரம் நட்டு
காத்திருப்போம்!
ஓரணியாய்
சேர்ந்திருப்போம்!
ஊரே அணியா
திரண்டு நம்
ஊரணியை
மீட்டிடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...