நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: வேம்பார் மு.க.இப்ராஹிம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

இன்னும் நினைவில் இருக்கிறது
கிராமத்துக்கு வெளியே இருந்த
அந்தக்குளம்..

நடக்க ஆரம்பித்து
கரைகளில் ஓடியது அதில்தான்..
சேற்றை உடலில் பூசிக்கொண்டு
பல்டி அடித்துக் குளித்தது..

ஐய்ரை மீனும் பிடித்ததும் அதில்தான்..
கருவமரத்துக் குச்சியில்
தூண்டில் செய்து
கொல்லை மண்ணைத் தோண்டி
சிரட்டாங்குச்சியில் புழு வை எடுத்து
கெழுத்தி மீனை பிடித்ததும் அதில்தான்..

குளத்துல நீர் தழும்பும்..
குல சாமி ஒண்ணு கரையில இருக்கும்..
நல்ல நாளு ஏதும் வந்தால்
ஊரே சேர்ந்து அதுல குளிக்கும்..

எடுபட்ட பயபுள்ளைகளா
எருமை மாடு மாதிரி
எவ்வளவு நேரந்தான் கிடப்பீங்கன்னு
ஏச்சும் பேச்சும் ஏகமாய் வந்து விழும்..

நீர் வற்றிப் போகும்போதுதான்
கெண்டைமீனும் கெ ழுத்தி மீனும்
குழம்பும்..கிராமத்துல மணக்கும்..
குளத்தை பற்றி நினைக்கையில்
நீர் வற்றிய குளமாய்
கண்ணிலும் நீர் வற்றிக் கிடக்கிறது..!

இப்போது
குளத்தையும் காணவில்லை..
நீரையும் காணவில்லை..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.