நீர் வற்றிய குளம்: பாலா ஆர்.எம்


அண்ணார்ந்து பார்க்கிறேன்
மேகம் பக்கத்தில் தெரிந்தது
எட்டிவிடலாம் என எண்ணி
ஏமாந்து போனேன்.
மேகத்துடன் பேசி நண்பனாகிவிடலாம்
என்று தோன்றுகிறது
நண்பனாகிவிட்டால் அவனிடம்
கூறி மழையை கேட்கலாம் என பேராசை பட்டு
தோற்றுப்போனேன்
அவனும் என் பக்கம்
சேராமல் கதிரவனுடன்
கைகோர்த்து விட்டான்
படுபாவி !
மழை இல்லாமல் என் கிராம குளம்
நீர் இன்றி வாடுகிறது
மீனும் நீரின்றி சாகிறது
மாரி பெய்யும்
குளம் நிறையும்
மீன்கள் துள்ளி துள்ளி விளையாடும்
அந்த நாளுக்காக காத்திருந்தேன்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...