நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்! நத்தம். எஸ். சுரேஷ்பாபு.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கோடை மழை பொய்த்தது!குளங்கள் எல்லாம் வறண்டது!சூரியத்தாகம் பெருக்கெடுக்கசுருங்கிப் போயின நீர் நிலைகள்!அருவியாய் ஊற்றெடுத்த குளங்களில்அடைப்புக்கள் ஊற்றெடுக்கஅடங்கிப்போனது நீர் வரத்து!நிலமெல்லாம் காய்ந்து வெடித்துநீரற்றுப் போகையில்நாரைகளும் கொக்குகளும்மீன்களும் நண்டுகளும்!ஆமைகளும் பாம்புகளும் விளையாடியகுளத்தில்பள்ளிப் பிள்ளைகள் துள்ளி விளையாடின!மட்டைப்பந்து கால்பந்து மைதானங்களாய்சில குளங்கள்!கால்நடைகளின் மேய்ச்சல் மைதானமாய்சில குளங்கள்!குப்பை மேடாய் சில குளங்கள்!இயற்கையோடு இயைந்த வாழ்வில்ஈரமோடு இருந்த குளங்கள்!செயற்கையின் அசுர வளர்ச்சியில்செத்துப்போயின.குடியிருப்புக்களாய்! வணிக அங்காடிகளாய்!கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை விட்டன!ஊரின் ஆதாரமாயிருந்த ஊருணிகள்வேர் அறுந்தனநீர் ஆதாரமின்றி நிற்கையில்தான்ஊருணிகள் நினைவுக்கு வருகின்றன!ஊரின் தாகம் தீர்த்து ஊர்மக்கள்உடலையும் சுத்தமாக்கிவிளைச்சலுக்கும் பாய்ச்சலாகிவிஸ்தாராமாய் நின்ற குளங்கள்உயிரிழக்க விடலாமோ?நீர் வற்றிய குளங்களினால்ஊர் வற்றிப் போகும்!உண்மைதனை உணர்ந்தால்ஊருணிகள் காப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.