நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம்: அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

அன்று குளம்இன்று அடுக்குமாடிக் குடியிருப்புஅன்று ஆறுஇன்று மணலைச்சுரண்டி மயானம்அன்று முப்போகம்இன்று மழையும் போட்டது நாமம்அன்று சிரிப்புஇன்று வலுக்கட்டாயமாய் முயற்சித்தாலும் முறைப்புவெயிலில் சுட்ட கருவாடாய்விவசாயின் உடம்புவெண்ணையில் சுட்ட கோழியாய்அரசியல்வாதிகள் ஜொலிப்புசுட்டெரிக்கும் சூரியனில்போராட்டம் நடந்தாலும்குளிர்சாதன அறையிலிருந்தேகருத்துச்சொல்லும் பலபேர்..வற்றிய குளம் வற்றியது தான்ஒட்டிய வயிறு ஒட்டியது தான்பெற்ற வடுக்களுக்கு மருந்தேதுஉற்ற உறவுகளும் வருந்தாதுபசுமையை இழக்க இழக்க‌வாழ்க்கையை கொஞ்சம் இழக்கிறோம்நீர்நிலைகள் வற்ற வற்றநரக நுழைவாசலில் நிற்கிறோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.