நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

நீர் வற்றிய குளம் : கே. நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

ஒரு குளத்தின் உயிர்  அதில் இருக்கும் 
நீரின் கையில் ! நீர் வற்றிப் போனால் 
மடிவது குளத்து மீன் மட்டுமல்ல !
முடியும் குளத்தின் வாழ்வும் அப்போதே !

தான் வற்றும் நேரம் குளம் சொல்லும் 
சேதி " வற்றிய குளம் நான் உனக்கு 
ஒரு எச்சரிக்கை மணி ! மனிதா ...
ஆட்டம் காண்கிறது உன் மண்ணின் 
நீர் வளம் ! நீர் வளம் பெருக்கி வாழ்க நலமுடன்"

வற்றியது குளம்தானே மடிந்தது மீன்தானே 
குற்றம் எனது இல்லை என்று சொல்ல முடியுமா ? 
ஒரு மாற்றம் வர வேண்டாமா  நம் மனதில்?

வற்றிய குளத்தையும்  குட்டை மற்றும் ஏரி 
அனைத்தையும் தூர் வாரி பேணிக் காக்க 
என்றும் வற்றாத ஒரு நீர் ஊற்று நம் 
மண்ணில் சுரக்க ஒரு  நல்ல மன 
மாற்றம் என்னும் விதையை விதைக்க வேண்டும் 
நம் மனதில் இன்றே இப்போதே நாம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.