நீர் வற்றிய குளம்! : வேலூர். மூ.மோகன்


அன்று....
அப்பாவின் சொற்ப சம்பளம்
ஆனந்த வாழ்வின் சங்கீதம்!
அம்மாவின் சிறு சேமிப்போடு,
அக்காவின் நாட்டிய வகுப்பு,
தங்கையின் வீணை அரங்கேற்றம்,
தம்பியின் ஊர் சுற்றல் என
அனைத்துக்கும் அதுவே அடிநாதம்!
இன்று...
ஆண்டுகள் பறந்தோடி...அப்பா
அறுபதை தொட்ட வேளை..
'போதும் உன் பங்களிப்பு!' என
மாலையும் கழுத்துமாய் ஓய்வில்
வீட்டுக்கு அனுப்பியது நிர்வாகம்!
'பிஎஃப்' மற்றும் 'கிராஜுடியால்'
பிள்ளைகளை கரையேற்றியதும்
'கடமை முடிந்தது!' என நிம்மதியாய்
'ஈஸி-சேரில்' அமர்ந்து அம்மாவோடு
'மலரும் நினைவுகளில்' மூழ்குவதே
வேலையாகிப் போனது அப்பாவுக்கு!
யார் கண் பட்டதோ....
வீட்டில் வறுமை ஆமையாய் புக-
பசுமையாய் இருந்த காலம்
பறந்து வந்த உறவுப்பறவைகள்
நீர் வற்றிய குளம் கண்டு பதறிப்போய்
நெடு தூரம் எங்கோ பறந்துவிட-
விழுதுகளாக வேண்டிய வாரிசுகள்
வெறும் பழுதுகளாகிப் போனதால்..
தொழ வேண்டிய தெய்வங்களின்று
திக்கற்று.. முதியோர் இல்லத்தில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...