நிழல் தேடி: பூ. சுப்ரமணியன்,


நிழல்
நின்று ஆடிப்பாடி
அடுக்குமொழியில்
பேசியதையெல்லாம்
நிஜம் என்று எண்ணி
தமிழக பாமர மக்கள்
தங்கள் ஓட்டுக்களை
துட்டுக்கு
வாரி வழங்கி விட்டு
வாழ வழியில்லாமல்
நிஜத்தைத் தேடாமல்
நிழலைத் தேடி தேடி
அலைகிறார்கள் !
நாம் காலையில்
நிழலைத் தேடினால்
நிழல் நம் முன்னே
வந்து வணங்குகிறது !
தேர்தலின்போது
நம்மையெல்லாம்
அரசியல்வாதிகள்
வணங்குவதைப் போல.
நாம் பிற்பகலில்
நிழலைத் தேடினால்
நிழல் நிற்காமல் நம்
பின்னே தொடர்கிறது !
தேர்தல் நாளன்று
தம்மோட ஓட்டுக்காக.
நம் பின்னே வரும்
அரசியல்வாதிகள் போல.
நாம் இரவில் ...
நிழலைத் தேடினால்
நிழல் இருக்கும் இடம்
தெரியாமல்
மறைந்து விடுகிறது !
வெற்றி பெற்ற பிறகு
தொகுதிப் பக்கமே
தலைகாட்டாத
அரசியல்வாதிகள் போல !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...