காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: இணுவையூர் வ-க-பரமநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கொட்டியே கிடக்கின்ற குறைவற்ற வளமனைத்தும்
வெட்டியே தகர்க்கின்ற விளையாட்டைத் தடுத்தாங்கு
எட்டிடில் விடுதலையாம் இயற்கைத்தா யவளுக்குக்
கொட்டிடும் மாண்பென்று கொள்.

ஏழைகள் உழைப்பினையாம் இரவுபகல் உறிஞ்சிடுவோர்
சூழவே பெரும்செல்வம் சுகபோகம் பெறுகின்றோர்
வாழவே துடிப்போர்க்கு வழங்கிடினில் விடுதலையாம்
மாழுமாம் துயரங்கள் வா!

போட்டியும் அழுக்காறும் புரள்கின்ற நிலைமாற்றி
நாட்டினை வளர்த்திடவே நலத்திட்டம் பலவாக்கி
போட்டிகள் இலையென்ற போக்குடைய விடுதலையே!
காட்டிடும் வழியென்று காண்!

பேசிடும் மொழிபார்த்துப் பிறப்புதனைப் பழித்திங்கு
வீசிடும் முடைநாற்றம் விடுபட்டே யழிந்திடவும்
மேதினி நலம்பெறவே விடுதலையை விதைத்திடுவீர்
சோதியே முகிழ்ந்திடுமாம் சூழ்ந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.