காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: மீனாள் தேவராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

விடுதலை, விடுதலை, விடுதலைஉலகில் எத்தனை எத்தனை மனிதர்கள்அத்தனை பேருக்கும் வேண்டும் விடுதலை!அரசியல்வாதிக்கு வேண்டும் விடுதலை ஆசையிலிருந்துபரதேசிக்கு வேண்டும் விடுதலை பசியிலிருந்துபெண்ணுக்கு வேண்டும் விடுதலை ஆண்ணடிமையிலிருந்துஆண்ணுக்கு வேண்டும் விடுதலை மதுபோதையிலிருந்துகாளையர்க்கு வேண்டும் விடுதலை காமவலையிலிருந்துகன்னியர்க்கு வேண்டும் விடுதலை காதல் போதையிலிருந்துசிறுவர்க்கு வேண்டும் விடுதலை இணையத்தின் பிடியிலிருந்துசிறுமியர்க்கு வேண்டும் விடுதலை அழகுகலை மையலிலிருந்துவயோதியர்க்கு வேண்டும் விடுதலை நோய்பிணியின் பிடியிலிருந்துமுதியோர்க்கு வேண்டும் விடுதலை தனிமையின் கொடுமையிலிருந்துசிலந்திவலையில் சிக்கிய பூச்சிகள் போல் பற்பல வலைகளில்சிக்கித்தவிக்கும் உலக மனிதர்களுக்கு வேண்டும் விடுதலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.