விடுதலை: பொன்.இராம்:


விடு தலை என
வெட்டிப் பேச்சுகள்
காணவா சுதந்திரம்
பெற்றோம்!
விடுதலை காண
மண்ணைச் செந்நீராக்கிய
ஆன்மாக்கள்
கறுப்புச் சிலைகளாக
மட்டும்தானா!
வருடத்திற்கொருமுறை
மாலை வாங்கவா
விடுதலை பெற
உழைத்தோம் என்ற
ஆன்மாக்களின் கண்ணீர்க்குரல்
கடற்கரை அலையில்
கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றன!
அரசியல் அலங்கோலத்தில்
கவனிக்கப்படாத பாலியல் வக்ரத்தால்
நசிந்து கொண்டிருக்கும்
பெண் இனத்திற்கு என்று முழுவிடுதலை!
பாரதியின் பெண் விடுதலை
ஏட்டளவில் மட்டும்தானா!
குடித்துக் குடி அழிக்கும்
மக்கள் சமுதாயம்
என்று விடுதலை பெறும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...