காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: பூ. சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

குழந்தை
மழலைமொழி பேசி
தத்தி தத்தி நடை பயின்று
நடந்து ஓடி விட்டால்
குழந்தைப்பருவத்துக்கு
நிலையான விடுதலை !

சிறுமி
கன்னியாகி காதலியாகி
அன்புக் காதலனை
கை பிடித்து விட்டால்
கன்னிப்பருவத்துக்கு
முழுமையான விடுதலை !

வட்ட நிலா
வானில் முகம் மறைத்து
அமாவாசை வந்துவிட்டால்
முழுநிலவுக்கும் மாதத்தில்
ஒருநாள் விடுதலை !

மாணவன்
பள்ளிக்குச் சென்று
படித்து முடித்து
பணியில் அமர்ந்துவிட்டால்
மாணவப்பருவத்துக்கும்
நிரந்தர விடுதலை !

காதலர்கள்
காதல்மொழி பேசி
பாடி ஓடி மகிழ்ந்து
கணவன் மனைவியாக
வாழ்ந்து விட்டால்
அவர்கள் காதலுக்கு
எப்போதும் விடுதலை !

கல்
சிற்பியின் உளியில்
அடிபட்டு அடிபட்டு
அழகிய சிலையாகி
நின்று விட்டால்
கல்லுக்கும் உளிக்கும்
காலமெல்லாம் விடுதலை !

கட்டிளங்காளை
கல்யாணம் முடித்து
தந்தையாகி தாத்தாவாகி
முதுமை வந்து விட்டால்
காளைப்பருவத்துக்கு
நிலையான விடுதலை !

மனிதன்
பிறந்து வளர்ந்து வாழ்ந்து
ஆறடி மண்ணுக்குள்ளே
அடங்கி விட்டால்
மனித உயிருக்கும்
புனிதமான விடுதலை !       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.