காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விடுதலை: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கொள்ளையர்கள்  பிடியிலிருந்து  வேண்டும்  விடுதலை,              கொடுங்கோலர்  ஆட்சிபறி  போக  விடுதலை !உள்ளமதில்  தூய்மையிலார்  தம்மையொழித்தே  நாம்             உன்னதநல்  வளர்ச்சிகாணல்  உண்மை  விடுதலை !கள்ளமனம்  தனைகொண்டோர்  ஆட்சியைவிட்டு  இனி             காணாமல்  போகத்தான்  நமக்கு  விடுதலை !எள்ளளவும்  தகுதியிலார்  ஆட்சியிலிருந்து  விரைவில்             இன்னாடும்  என்றைக்குத்தான்  விடுதலை  பெறுமோ?ஆங்கிலேயர்  தமைவிரட்டி  விடுதலைகண்டோம்! --- இன்று           அற்புதநல் வளர்ச்சிகண்டு  உயர்வினைக்  கொண்டோம்!பாங்குற்ற  நிலைதன்னைக்  கண்டிட்டதெல்லாம், --- தூயப்           பண்டிதராம்  நேருகொண்டத்  திறமையால்  தானாம்!ஓங்கியது  நமதுபுகழ்  உலகவர்முன்னம், --- எனினும்           உன்னதநல்  நிலைகாணல்  இருக்குது  இன்னும்!மாங்கனிகள்  கிடைக்காதாம்  மந்திரத்தாலே, --- நாம்           மனதிலிதைக்  கொண்டுழைக்க  வெற்றியும்  நமதே!விடுதலை  என்பதோர்  வேட்கையதாம்! ---கொள்ள           வினோதநல்  உணர்வுகள்  பிறந்திடுமாம்!ஒடுக்கிட  நினைப்பவர்  தமையெல்லாம்---விரைவில்           ஒழிப்பதே  நம்முதற்  கடமையதாம்!தடுத்திடத்  துணிபவர்  எவராயினும்---அவரைத்           தகர்த்திட, வென்றிட  வேண்டுமென்பார்!படுபாதகர்  தமைநாம்  ஒழித்திடத்தான்---நாடும்           பாரினில்  உயர்ந்திடக்  காண்போம்நாம்!விடுதலை  பெற்றோம்  விளக்கமுற்றோம ! ---இன்று           விண்ணிலும்  சாதனை  தனைப்படைத்தோம்!படுகுழி  தனில்முன்னோர்  உழன்றதெலாம்---ஓர்           பழங்கதை  ஆகிடக்  கண்டிட்டோம்!அடுக்கடுக்  காகபல்  துறைகளிலும்---நாம்           அற்புத  வளர்ச்சியைக்  கண்டுவிட்டோம்!நடுத்தர  வரக்கத்து  நாடுகளில்---இன்று           நமைப்போல்  உயர்வினைக்  கண்டவர்யார்?விடுதலை  எனும்நல்ல  வேட்கைதனைக்  கொள்ளத்தான்படும்துயர்கள்  விலகிடவே  பார்த்திடலாம்! --- கொடுமைதனை,வென்றழிக்கும்  உணர்வன்றோ  விவேகம்  மிக்கசெயல் ;நன்றான  தென்றுணர்வோம்  நாம் !                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.