விடுதலை: -உத்ரன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

வேலைக்காரி வேண்டுமானால் வீட்டுக்காரியும் ஆகலாம்நாசக்காரக் கும்பல் சேர்த்து நாட்டையாளத் துடிக்கலாம்பாசக்கார வேஷமிட்டு பணம் அடிக்கத் தவிக்கலாம்ரோசக்கார மக்களிடம் நொடியும் அது நிற்காது!காவல்துறையும் நீதித்துறையும் கைகோர்த்து நடந்திட்டால்பாசமென்ற போர்வையில் பாவிகள் நித்தம் வலம்வரபாரினில் எங்கணுமே பாவப்படுத்த இடமின்றி நீளுலகம் தானும் நிச்சயமாய் மீளும்!திட்டமிட்ட சொத்துசேர்ப்பு சீர்கெடுத்த சம்பவம்பட்டங்கட்டி அரசாள பாவிகளின் கை கோர்ப்புபதவி சுகங்காட்டி பல அதிகாரிகளை ஈர்ப்பு என்றுதகுதி சிறிதுமில்லா தருக்கர்களின் கூட்டம் கோட்டையில்!கங்கை அமரன் கதாசிரியர் விசுவென்றுஉள்ளமுள்ள பலரும் உண்மையை உரைக்கையிலேகைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையாயென்று நாமும் மனமொடிந்து ஓரமாய் மனம் வெதும்பி நிற்கின்றோம்!படித்தும் மூடர்களாய் பதவி சுகம் காணவென்றேபூலானையும் மிஞ்சிய மன்னை மினிம்மாவைபுகழ்ந்து பேசும் அனைவரையும் போடவேண்டும்வெளிக்காற்றே படாத வெஞ்சிறையில் சிலகாலம்!அந்த நாளே தமிழகத்தின் இனிமையான விடுதலை நாள்!உலகே மகிழும் உன்னத விடுதலை நாள்!மனித இனம் அனைத்தும் மகிழ்ந்து போற்றும் நாள்விண்ணவரும் வியக்கும் வியப்பான விடுதலை நாள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...