நிலாவிடு தூது : முனைவர் . கா. மகேந்திரபிரபு

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

வெண்மையின் உண்மை
இரவின் உரிமை-குளுமை
தலைவனின் தனிமையில்
தலைவியாகும் நிலவே !
தலைவி தூரத்தில் இருந்தால்
தூதாகும் நிலவே !
பெண்ணின் முகமென நிலவே !
மண்ணின் குளத்தில் நிழலாய்
கண்ணில் ஜொலிக்கும் நிலவே !
தூது செல்லும் நிலவே
மறந்து விடாதே பறந்து செல் !
நிலவின் நிழலில் களிப்புறும்
தலைவனும் தலைவியும்
நிலாவிடு தூது சொர்க்கம் காண
இனிமைக்கு முகவரி !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...