காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலா விடு தூது: சசி எழில்மணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

தேய்பிறை கண்டும்
வளர்பிறை கொண்டும்
மாறிடும் வான்நிலா

சோகத்தை உள்வைத்து
புன்னகை சிந்திடும்
நீயன்றோ பால்நிலா

தென்றலும் தீண்டவே
மேகங்கள் கலையுமே
தாலாட்டும் வானம்
நானாக மாற
திரைபோட்ட கைகளை
இளமனம் விளக்குமே

வசந்தகால அழைப்புகள்
இரவினில் தொடருமே
குளிரும் இளமனம்
பனியில் நனையும்
பார்த்திடும் பார்வைகள்
தூதாய் அமையுமே

சொல்லிடும் வார்த்தையில்
தேன்துளி சிதருமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.