நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை: ​-கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

மேகங்கள்
வெளிநாடு சென்றனவோ
கோடை விடுமுறைக்கு?

வருணன்
தலைமறைவாக இருக்கிறானாமே
என்ன குற்றம் செய்தான்?

வெண்பஞ்சு அருவியில் நீராடிய
எங்களைச் சோதிக்கவா
வியர்வைக் குளியல்?

கார்ஓடும் நெடுஞ்சாலைகளில்
கானல்நீர் ஓடுகிறதே
கண்ணுக்கு எட்டிய தூரம்

நிலா இரவில்
வீட்டுக் குழாயைத் திறந்தால்
சுட்டு விடுகிறதே வெந்நீர்

சருகுகளாகி
விறகுகளாகிக் கிடக்கின்றனவே
காடுகள்
மழைதெய்வமாம்
மாரியம்மனுக்கு ஊர்தோறும் கோயில்கள்

அம்மனின் வேக்காட்டைத் தணிக்க
இளநீர்
சந்தனம்
தயிர் என அபிஷேகம் நாள்தோறும்

சாமி வெப்பம் தணிக்கின்றோம் நாங்கள்
பூமி வெப்பம் தணிக்க
சாமி நினைக்காதா?

சுற்றிலும்
துயர்பெருகிச் சுடும்போது
உதவும்
உள்ளத்துக்கு உவமை கேட்டேன்

பதில் சொல்லும் வகையில்
கோடையில்
கொட்டியது மழை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.