இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை காலை நேரில் சென்று நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், “ நான் ஓமந்தூரார், அண்ணா, காமராஜர், கக்கன் ஆகியோரைப் பார்த்ததில்லை. அவர்கள் அனைவரையும் சேர்த்தது போல நல்லகண்ணுவை பார்க்கிறேன். நல்லவராக, எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்தால், மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. தோழர் நல்லகண்ணுவுக்கு வீரவணக்கம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் நாசர், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
Summary
Rajinikanth pays tribute to Nallakannu!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஜினி - 173 படப்பிடிப்பு அப்டேட்!

”தோழர் நல்லகண்ணுக்கு வீரவணக்கம்!” நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


