நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

 கோடை மழை: திருமதி மங்களாத்மா,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கோடை மழையே  நீதான் என்றும் 
கொடை மழை என்பதில் ஐயமில்லை!
படை மிக க் கொண்ட மன்னரும்கூட
பரிதவித்துப் போவர் நீ வரவில்லையெனில்!

துளியாய் நீயும் முகத்தில் விழுகையில்
துயரங்கள் அனைத்தும் பறந்தே போகும்!
தாயின் வாயால் தன் இரை தேடும்
குஞ்சுகள் போலக் குவலயம் மகிழும்!

உன்னில் நனைந்தாலும் உன்னை நினைத்தாலும்
இதயம் முழுவதும் நிறையுது இன்பம்!

தினநாட்காட்டியில் தாளைக் கிழித்து
தினமொருமுறை நாட்களை யெண்ணி
தீபாவளியை அனுபவிக்கத் துடிக்கும்
சின்னக் குழந்தையின் மனத்தினைப்போல
நீ வரும் நாளை நினைந்தே மக்கள்
நித்தம் ஒருமுறை நாட்களை எண்ணுவர்!

வெட்கி மறுகும் புதுமணப் பெண்ணாய்
ஏனோ நீயும் சிலமுறை ஏமாற்றி விடுகிறாய்!
கறுப்பாய் இடிப்பாய் கண்கூச மின்னுவாய்

ஆனாலும் துளியாய் எம்மை ஆதரிக்க மாட்டாய்!
அடிக்கடி நீ பெய்து அண்டம் நிறைத்தால்
அண்டா குண்டாவெல்லாம் அமைதியாய் உறங்கும்!
பாசப் பிணைப்புகள் மேலும் இறுகும்
பல்வகையானும் உலகம் தழைக்கும்!

உந்தன் கடமை பெய்வதே என்பதை
ஒருபோதும் நீ மறந்து விடாதே!
உயிரை வளர்ப்பது மழையே நீதான்
உண்மை முழுதாய் கொஞ்சமும் மிகையிலை!

உலகம் வாழ்வது உன்னால் என்றும்
உதிரம் பெருகுவதும் உன்னால்தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.