கோடை மழை- கவிஞர் கே. அசோகன்


சித்திரையில் கதிரவனின் அண்மை தானே
சீறிப்பாயும் வெம்மையின் தாக்க மாகும்!
கத்தும்கிளி சோலைகள் பக்கம் சென்றே
களிப்பாக இருக்கவே எண்ணம் தோன்றும்!
கத்துங்கடல் ஓரத்திலே கூட்டமு மாய்
காலாற நடக்கத்தான் ஆவல் கூட்டும்
புத்தாண்டு பிறந்துதான் புத்தொளி கூட்ட
பெய்திட்டால் கோடைமழை நலம் தானே!
ஆடையிலே சிறந்ததுதான் பருத்தி ஆடை
அதுதணிக்கும் வெம்மையை கோடை யிலே!
கோடையிலே வேண்டுவதே குளிர் தென்றல்
குளுகுளு தென்றலோடு மகிழ்ந்திடு வோமே!
மேடையிலே வீசிடும் மெல்லிய காற்றாய்
மென்நகையாள் கூறிவிட்ட காதல் போல
வாடையோடு சேர்ந்தேதான் திரண்டு வந்து
வான்மேகம் பொழிந்திடுமோ! கோடை மழை!
அகில்பரப்பும் வாசம்தான் காடே சூழும்!
அனல்பறக்கும் பேச்சுதான் அரசிய லாகும்!
தகிக்கின்ற கோடையிலே தாபத் தோடு
தவித்தேதான் ஏங்கிடுவோம் கோடை மழை!
முகில்குடித்த கடல்நீரை தேக்கி வைத்து
மழையாக பொழிந்தால் மகிழ்ச்சி தானே!
தகிப்பாலே துவளுகின்ற மக்கள் கூட்டம்
தணிந்திடுமே! கோடைமழை! பொழிந் தாலே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...